விழுப்புரம்: விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த 4 வயது சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மகளை மடியில் ஏந்தி சிறுமியின் தந்தை கதறி அழும் காட்சி வெளியாகி அனைவரின் நெஞ்சையும் கணக்க செய்துள்ளது. அம்மா எந்திரிமா.. வீட்டுக்கு போலாம்.. என கதறி அழும் காட்சிகள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.