மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், நிர்வாகிகள் தாமதம் குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஜனவரி மாதத்திற்குள் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.