பூம்புகார் - Poombhukar

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Dec 17, 2024, 15:12 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் - இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு

Dec 17, 2024, 15:12 IST
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் சேவை தொடங்க உள்ளது என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளரிடம் கூறும்போது, நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.  இந்தநிலையில் வடகிழக்குபருவமழையின் காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து முக்கிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் ஜனவரி 2ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதில் கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதோடு இருவழிபயணத்திற்கு முன்பு 9700 நிர்ணயிக்கப்பட்டநிலையில் தற்போது 8,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  மேலும் பயணத்தின்போது 10 கிலோ வரை இலவசசுமை அனுமதிக்கப்படும். அதிகாலைபயணத்திற்கு பயணிகள் வருவதால் காலைஉணவிற்காக சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர். இதனைக்கருத்திலெடுத்து பயணச்சலுகையாக காலைஉணவாக இட்லி பொங்கல் வழங்கப்படும்.  மதியஉணவாக வெஜ்பிரியாணி புலாவு போன்ற உணவுவகைகள் பரிமாறப்படும். மேலும் இரண்டுஇரவு மூன்றுநாள் தங்கும்வசதிகொண்ட குறுகியபயணபேக்கேஜுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தபயணத்திட்டங்கள் நடுத்தரவர்க்க பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.