மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரித்தல், வகைப்படுத்துதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை உதவி ஆட்சியர் சபீர் ஆலம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.