மயிலாடுதுறை: உலக தியான தின விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் எந்த மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக தியான தினத்தை முன்னிட்டு "வேர்ல்ட் மெடிடேஷன் டே" என்ற பெயரில் இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது சீர்காழி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் மற்றும் சபாநாயகர் முதலியார் இந்த மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தியது. இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.