மயிலாடுதுறை: வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் திருட்டு

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றிருந்த நிலையில், அவரின் வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் கைரேகை நிபுணர்களைக் கொண்டு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி