தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தியாகேசா பெருமானுக்கு நடந்த முசுகுந்த சஹஸ்ரநாம அர்ச்சனையில் கலந்து கொண்டார்.
மார்கழி மாதம் இரண்டாம் நாளில் நடந்த இந்த சிறப்பு பூஜையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இசை அமைப்பாளர் இளையராஜா தனது விவகாரத்தை பிரச்சினையாக செய்ய வேண்டாம் என அவரே (இளையராஜாவே) சொல்லிவிட்டார்.
யார் யார் எங்கு நின்று வழிபாடு நடத்த வேண்டும் என்பது ஒரு மரபாக இருக்கிறது. இரண்டு தரப்பிலும் மாற்று கருத்து இருக்கிறது, அங்கு என்ன நடந்தது என்பதை நான் நேரில் பார்க்கவில்லை. நான் தற்போது நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயிலுக்குள் கூட உள்ளே செல்லவில்லை. இங்குள்ள சிவாச்சாரியார்கள் தான் எனக்கு பிரசாதம் வழங்கினார்கள்.
நான் வெளியில் இருந்து வாங்கி கொண்டேன். அது போல் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கும். அரசின் மீது வரும் விமர்சனம் குறித்த கேட்ட கேள்விக்கு பதிலளித்த தருமபுரம் ஆதீனம், இளையராஜாவிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.