சாலையை சீரமைக்க கோரிக்கை

83பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலையூர் காவிரி ஆற்றங்கரை தெருவில் மழையின் காரணமாக சாலை சேதமடைந்து காணப்பட்டுள்ளது.

தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

இந்த சாலை மேலையூர், கஞ்சா நகரம், கருவாழக்கரை ஆகிய கிராமங்களில் இருந்து செம்பனார் கோவிலுக்கு செல்ல முக்கிய சாலையாகும்.

எனவே இந்த காலையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி