வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம்
வேதாரண்யம், தலைஞாயிறு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத விபரத்தை கணக்கெடுக்காததை கண்டித்தும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.