வாணலியில் எண்ணெய் உற்றாமல் கால் கப் கொண்டைக் கடலையை வறுக்க வேண்டும். அதே அளவிற்கு வேர்க்கடலையை எடுத்து நன்றாக வறுக்க வேண்டும். இரண்டையும் மிக்ஸியில் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பொடியை இரண்டு ஸ்பூன் அளவிற்கு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் மூன்று பேரீட்சம்பழம், ஒரு கிளாஸ் பால், ஒரு வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் குடித்தால் வீட்டிலேயே தயாரித்த சிறந்த புரோட்டீன் மில்க் ஷேக் ரெடி.