மயிலாடுதுறை: தூய்மை பணியாளர் விழிப்புணர்வு பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான தூய்மை காவலர்களுக்கான குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் வகைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர் ஆணைய இயக்குனர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர் குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் வகைப்படுத்துதல் குறித்து காணொளி காட்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.