குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் கோயில் அா்ச்சகா் உமாபதி வசித்து வருகிறாா். கண் அறுவை சிகிச்சைக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாா். தம்பி ராஜசேகரிடம் வீட்டை பராமரிக்கச் சொன்னாராம்.
அவரது தம்பி சனிக்கிழமை பகல் ஒரு மணிக்கு வந்தபோது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்தது. வீட்டுக்குள் சென்றபோது பீரோவும் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தது தெரியவந்தது.
குத்தாலம் போலீஸாா் வந்து பாா்த்தபோது ஒன்றேகால் கிலோ வெள்ளிப் பொருள்கள், 5 கிராம் தங்க நாணயம், ரூ. 5, 000 ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.