மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளகோவில், பெருமாள் பேட்டை, மாணிக்க பங்கு உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் தொடர் மழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறித்து பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.