

நான்கு வழி சாலை மேம்பாலம் பணிகள் தீவிரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு வழி சாலை திட்டப் பணியில் மேலாண்மைக்காக தரங்கம்பாடி அருகே எருக்கட்டாஞ்சேரி மேம்பாலம் பணி வேலை நடைபெற்று வருகிறது. தற்போது மேம்பாலத்தின் வேலை 25 சதவீதம் முடிவு பெற்ற நிலையில் தற்போது மின் தூக்கி இயந்திரம் மூலம் பாலத்தின் கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். விரைவாக இந்த மேம்பாலத்தின் பணி இரண்டு மாதத்திற்குள்ளாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.