ஓடும் பஸ்ஸில் நகை திருடிய பெண்ணை பிடித்த பயணிகள் (வீடியோ)

55பார்த்தது
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று(டிச.17) அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த பெண்ணின் கழுத்திலிருந்த 5 பவுன் நகையை மற்றொரு பெண் பறிக்க முயன்றிருக்கிறார். அப்போது சுதாகரித்துக்கொண்ட பெண் பயணி, உடனடியாக செயினை பறித்த பெண்ணை மடக்கி பிடித்தார். தொடர்ந்து சக பயணிகள் அப்பெண்ணை சுற்றிவளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து வடசேரி போலீசார் அப்பெண்னை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி