மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நண்டலாற்றில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கரையில் உடைப்பை ஏற்பட்டது.
இதனால் நல்லாடை, அரசூர், கொத்தங்குடி, விளாகம் ஆகிய ஊராட்சிகளில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.