அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

64பார்த்தது
மயிலாடுதுறை அரசு பெரியாா் தலைமை மருத்துவமனையில் ரூ. 45. 50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் ஆய்வு செய்தாா்.


மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ. 45. 50 கோடியில் கட்டப்பட்டு வரும் 7 அடுக்கு மருத்துவமனை கூடுதல் கட்டடங்களும் ஆய்வு செய்யப்பட்டது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


அமைச்சருடன், மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி, பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், மாவட்ட வருவாய் அலுவலா் ந. உமாமகேஷ்வரி, நகராட்சி தலைவா் என். செல்வராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குநா் பானுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி