நாகை: மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
தமிழக மின்வாரியத்தில் 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றை நிரப்பாமல் தனியார் மூலம் அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப முயற்சிக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய எம்பிளாயிஸ் பெடரேஷன் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி