தமிழகத்தில் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும், சண்டிகர், உத்தரகாண்ட் மாநிலங்களில் குடும்பத்துடன் போராடிவரும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த மயிலாடுதுறை அடுத்த பேச்சாவடி துணைமின் நிலையம் எதிரில் சிஐடியு மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிஐடியு தொழிலாளர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.