மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட நாயக்கர் குப்பம், மடத்து குப்பம் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுத்திடும் வகையில் தடுப்பு சுவர் தூண்டில் வளைவு அமைத்திட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்பழுதி தலைமையில் மீன்வளத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று முகத்துவாரத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்