கழிவுநீா் வாகனத்தை அதிமுகவினா் முற்றுகை

54பார்த்தது
சீா்காழி ஈசானிய தெருவில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியில் ரூ. 2. 60 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இதற்கிடையில், நகராட்சி மூலம் தனியாா் வாகனத்தில் கொண்டுவரப்படும் கழிவுநீா், சுத்திகரிப்பு தொட்டியில் ஊற்றப்பட்டு வந்தது. சில நேரங்களில் கழிவுநீரை திறந்தவெளியில் கொட்டிசெல்வதால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நகராட்சி குப்பை கிடங்கிற்கு கழிவுநீருடன் வந்த தனியாா் வாகனம், கழிவுநீரை திறந்த வெளியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் இ. மாா்கோனி தலைமையில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி, அதிமுக நகர பொருளாளா் மதிவாணன், வாா்டு செயலாளா் லட்சுமி உள்ளிட்ட50-க்கும் மேற்பட்டோா், கழிவு நீா் வாகனத்தை முற்றுகையிட்டனா்.

பின்னா், நகராட்சி பொறியாளா் கிருபாகரனிடம் புகாா் தெரிவித்தனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்ததையடுத்து, அதிமுகவினா்கள் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி