கேரள மாநிலம் மூணாறு இக்கா நகரைச் சேர்ந்தவர் சிவன் (49). மிகவும் உயரம் குறைந்தவர் என்பதால், அவரை 'குட்டை சிவன்' என அழைத்தனர். இவர் தமிழில் விஜய் நடித்த விஷ்ணு மற்றும் மைனா உட்பட சில படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் இன்று (டிச. 22) காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.