மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை டிசம்பர் 21ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை, சோழ சக்கர நல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்ட கோபுரம், வழுவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.