தெலங்கானா மாநிலம் குடிஹத்னூரில் இளைஞர் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், இளைஞரின் வீட்டிற்குச் சென்று மோதலில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த உறவினர்கள் வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.