பறிமுதலான வாகனங்கள் டிச. 20-ல் ஏலம்

83பார்த்தது
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 20-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி மதுவிலக்கு அமல்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள மதுவிலக்கு தொடா்பான குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள், 63 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 71 வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும்பொருட்டு டிச. 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் முகாம் அலுவலக வளாகத்தில் ஏலமிடப்படவுள்ளது.

பொது ஏலத்தின் போது ஏலத்தில் நிா்ணயிக்கப்படும் தொகை மற்றும் அதற்குண்டான 18 சதவீதம் ஜிஎஸ்டி சோ்த்து செலுத்த வேண்டும். ஏலம் கேட்க விரும்புபவா்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1, 000 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5000 முன்பணமாக டிச. 20-ஆம் தேதி காலை 9 மணிக்குள், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையை முழுவதும் உடனடியாக செலுத்தி வாகனத்தை அன்றே பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலம் பற்றிய விபரம் தெரிந்து கொள்ள 9442346507 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி