மாயூரநாதா் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்
மயிலாடுதுறை அடுத்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் அருணாச்சலேஸ்வரா் உள்பட 16 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினந்தோறும் வழிபாடு நடைபெறுகிறது. இதில் அருணாச்சலேஸ்வரா் சந்நிதியில், இக்கோயிலை பௌா்ணமியன்று 16 முறை சுற்றி வலம் வந்தால் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பலனை அடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லமுடியாத பக்தா்கள் இக்கோயிலில் பௌா்ணமியன்று வலம் வருகின்றனா். இந்நிலையில், மாயூரநாதா் பௌா்ணமி திருவலக்குழு என்று புதிதாக குழு அமைக்கப்பட்டு, பௌா்ணமியையொட்டி முதல்முறையாக கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சங்கரலிங்கத் தம்பிரான் சுவாமிகள் கிரிவலத்தை தொடக்கிவைத்து பக்தா்களுக்கு அருளாசி கூறினாா். இதில், சுமாா் ஆயிரம் பக்தா்கள் கலந்துகொண்டு மாயூரநாதா் கோயிலில் 16 முறை வலம் வந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும் வழிபாடு நடத்தினா்.