சமூகவலைதளங்களில் செல்போன் செயலி மூலம் ஒரு குழுவை தொடங்கி அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை மர்ம நபர்கள் பகிர்ந்து வருவதாக சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீஹரி (23) என்பவரை நேற்று (டிச. 21) கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.