திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. கழிவுகளை அகற்றும் பணி சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், கேரளாவில் இருந்து 16 டாரஸ் லாரிகள் வந்துள்ளன. மேலும், கேரளாவில் இருந்து 25 அதிகாரிகள் கொண்ட குழு திருநெல்வேலி வந்துள்ளனர். நடுக்கல்லூரில் இருந்து 4 பிரிவுகளாக பிரிந்து மருத்துவ கழிவுகள் எடுக்கப்படுகின்றன.