சென்னை பள்ளிக்கரணையில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்ந்த கேடிஎம் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள், சாலை தடுப்பின் மீது மோதியதாக தெரிகிறது. இதில், பைக் தூக்கி வீசப்பட்ட நிலையில் விஷ்ணு, கோகுல் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதில், ஒருவரது தலை துண்டானது. மது போதையில் பைக்கை அதிவேகமாக இயக்கிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.