எல். ஹெச். பி. பெட்டிகளுடன் ரயில் இயக்கம்

78பார்த்தது
கோவை - மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு வரும் ஜன் சதாப்தி விரைவு ரயில் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் எல். ஹெச். பி. பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் (எண்: 12084) செவ்வாய்க்கிழமைகள் தவிர கோவையில் இருந்து காலை 7. 15 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 1. 45 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக, மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி விரைவு ரயில் (எண்: 12083) செவ்வாய்க்கிழமைகள் தவிர மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3. 10 மணிக்குப் புறப்பட்டு அன்றைய இரவு 9. 20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது.

இந்த ரயிலானது, வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் எல். ஹெச். பி. பெட்டிகளுடன் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி