நாகை: நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி துவங்கப்பட்டது. இந்த பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இதில் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.