பாலா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூர்யா, “சேது படம் பார்த்த பிறகு அதில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 100 நாட்கள் ஆகியது. அப்படி ஒரு படைப்பிற்கு பிறகு பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நான் கதாநாயகனாக இருப்பேன் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை” என நெகிழ்ச்சியாக பேசினார்.