ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவில் மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில், பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தர்மேந்திர யாதவ், கல்யாண்பானர்ஜி உள்ளிட்டோர் குழுவில் நியமனம்; திமுகவின் செல்வகணபதி, ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று (டிச.17) தாக்கல் செய்தார்.