
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த சீரியல் நடிகை ரோஷினி
விஜய்சேதுபதி நடிப்பில் பாண்டியராஜ் இயக்கி வரும் படத்தில், சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் லீட் ரோலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. யோகிபாபு, மலையாள நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கிராமத்து கதையம்சமாக இப்படம் உருவாகி வருகிறது.