தூத்துக்குடி: கோவில்பட்டியில் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மாரி செல்வம் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாரிசெல்வத்தை கூட்டப்புளி அருகே போலீசார் கைது செய்ய முயன்றபோது அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயற்சித்தார். அப்போது காவல்துறையின் தனிப்படையினர் மாரிசெல்வத்தை இடது காலில் சுட்டு பிடித்தனர்.