கர்நாடகாவைச் சேர்ந்த பெண் பாடி பில்டர் ஒருவர் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. சித்ரா புருஷோத்தம் என்ற அந்த பெண் பாடி பில்டர் நகைகள் அணிந்தவாறு மணப்பெண் கோலத்தில் தனது கட்டுமஸ்தான உடலை காட்டுவது போன்று அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட நெட்டீசன்கள் சிலர், அப்பெண்ணின் மாமியாரும், நாத்தானரும் இந்த உடலை பார்த்தாலே அவருடன் சண்டையிடாமல் அமைதியாகிவிடுவார்கள் என கமெண்ட்களை பதிவிட்டனர்.