மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய நிலுவையிலுள்ள திட்ட நிதியான ரூ.3,300 கோடியை உடனடியாக ஒதுக்கவேண்டும் என ஒன்றிய அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி கோரிக்கை வைத்துள்ளார். ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ள நிதி விடுவிக்கப்பட்டதும் பணியாளர்களின் நிலுவை ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.