திருவள்ளூர்: அரசு மண்குவாரி செயல்பட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

62பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணா நதிநீர் செல்லும் கால்வாய் ஒட்டிய பகுதியில் அரசு மண் குவாரி மூன்று மாதத்திற்கு அதானி சாலை அமைக்கும் பணிகளுக்காக மண் எடுப்பதற்காக அனுமதி பெற்று அங்குள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் அதற்கான அனுமதியை கொடுத்துள்ளனர். 

தங்கள் பகுதியில் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை அணை மற்றும் கிருஷ்ணா கால்வாய் நீரை கொண்டு வருவதற்கு விவசாய நிலங்களை வழங்கிய கிராமத்தைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அந்த இடத்தில் தேர்வு செய்து வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்த நிலையில் அங்கு மண்குவாரி செயல்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மாற்று இடத்தில் மண் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம பொதுமக்கள் மற்றும் விசிக மாவட்ட செயலாளர் நீலமேகம் சேர்ந்த வழக்கறிஞர் விவேக் பாபு உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் கிராம மக்களுடன் இணைந்து மண் எடுக்க வந்த மண் அள்ளும் இயந்திரத்தை உள்ளே செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர். 

கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையிலான காவல்துறையினர் கிராம மக்களிடம் சமரசம் மேற்கொண்டனர். மேலும் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

தொடர்புடைய செய்தி