சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்தில் ஷேன் வாட்சன் சதம் விளாசி அசத்தியுள்ளார். பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியில் 48 பந்தில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என விளாசிய ஷேன் வாட்சன் சதமடித்து அசத்தியுள்ளார்.