பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கும், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் நாளை (பிப்.25) முதல் 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் அசல் செய்முறைப்பயிற்சி அத்தாட்சி சான்றிதழுடன் நாளை முதல் அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுதலாம். தேர்வர்கள் தவறாமல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் செய்முறை தேர்வை எழுத வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.