சென்னை - லண்டன் நேரடி விமானச் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு, எம்.பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பின் போது நிறுத்தப்பட்ட லண்டன் - சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஸ்டீபன் டிம்ஸ் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர், கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல நானும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.