சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இன்று (பிப்.24) நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் வங்கதேச அணியை நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2 லீக் போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறியது. இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.