நடிகை விஜயலட்சுமி அளித்த திருமண மோசடி புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சீமான் மீதான திருமண மோசடி புகாரை 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.