திருத்தணி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இந்தி மொழி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்த திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் உட்பட திமுக நிர்வாகிகள் கைது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை எதிர்த்து திமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடைமேடைகளில் உள்ள பெயர் பலகைகளில் இந்தி மொழி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழுக்கும் போராட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஈடுபட்டனர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிரண் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் திமுக கொடிகள் கையில் ஏந்திய ஊர்வலமாக ரயில் நிலையம் சென்று பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி மொழி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது அனுமதியின்றி ரயில் நிலையத்தில் நுழைந்து பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண் உட்பட 50க்கும் மேற்பட்டோரை இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.