நெல்லை மாநகர சுத்தமல்லியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் முப்புடாதி அம்மன் மற்றும் சுடலைமாடன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா யாகசால பூஜைகள் நேற்று முதல் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.