நெல்லை மாநகர டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது பள்ளிவாசலில் இருந்து தொழுதுவிட்டு வெளியே வந்த தகவலை +1 படிக்கும் மாணவன் செல்போனில் தெரிவித்ததாக விசாரணையில் தெரிவந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருதி சிறுவன் இன்று கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.