தமிழர் விடுதலைக் களம் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் இன்று (மார்ச் 6) நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் சாலை அமைப்பதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகளும் துணை போவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த பேட்டியின் பொழுது தமிழர் விடுதலைக் களம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.