நெல்லை: சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம்

57பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மேலகுளம் அருகே உள்ள அருள்மிகு ராஜ ஶ்ரீ அஷ்டபுஜ தவயோக வனவாராஹி அம்மன் கோயிலில் இன்று பங்குனி மாதம் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பெண்கள் நேர்த்திக் கடனாக மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். மேலும் தேங்காய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி