சென்னையில் நேற்று (மார்ச் 23) நடந்த ஐபிஎல் போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஆலந்தூர் மெட்ரோ தூணில் அதிவேகமாக பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.