திமுக, காங்கிரஸ் MLA-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

61பார்த்தது
திமுக, காங்கிரஸ் MLA-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது விவகாரத்தால் புதுச்சேரிக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து விவாதம் நடத்தக்கோரி சபாநாயகரை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்.

தொடர்புடைய செய்தி